232 தொகுதிகளை முடித்து விட்டோம். இன்னும் இரண்டே தொகுதிகள் தான்.உருக்கமாக பேசிய அண்ணாமலை

232 தொகுதிகளை

232 தொகுதிகளை முடித்து விட்டோம்

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை 234-வது தொகுதியில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளதை ஒட்டி, அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காக மக்கள் அனைவரையும் அந்த யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் அண்ணாமலை.சென்னை: தமிழ்நாடு முழுவதும் ‘என் மண்; என் மக்கள்’ பாதியாத்திரையை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மக்களுக்கு உருக்கமாக வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை நடத்தி வருகிறார் அண்ணாமலை. தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக அரசையும், தமிழக முதல்வரையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார் அண்ணாமலை. ஆனால், அண்ணாமலை நடத்துவது பாத யாத்திரை அல்ல ரத யாத்திரை என திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. “பாதயாத்திரை என்றால் நடந்து போவது, ஆனால் சொகுசு வேனில் ரத யாத்திரை சென்றுவிட்டு பாதயாத்திரை என அண்ணாமைல கூறுகிறார்” என அவை கூறி வருகின்றன.

என்னுடன் இந்த பாதயாத்திரையில் ஆரம்பம் முதல் கடைசி வரை பயணம் செய்தவர்கள், யாத்திரையில் கலந்துகொண்டவர்கள், யாத்திரைக்கு உதவியவர்கள், யாத்திரையில் கலந்துகொள்ள தவறியவர்கள் என உங்கள் அனைவரையும் உங்கள் அன்பு தம்பியாக பல்லடத்தில் மார்ச் 27-ம் நடைபெறும் யாத்திரைக்கு வர வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன். இது என்னுடைய யாத்திரையோ, பாஜகவின் யாத்திரையோ அல்ல. இது உங்களின் யாத்திரை. இந்த யாத்திரையில் நமது பிரதமர் நரேந்திர மோடி சரியாக 2 மணிக்கு கலந்துகொள்வார்கள். நீங்கள் நேரடியாக வந்து நமது பிரதமருக்கு உங்கள் ஆசிர்வாதத்தை கொடுங்க. அன்பை கொடுங்க. எங்களுடன் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று உரக்க சொல்லுங்கள். நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Reply