பக்கவாதம் (stroke) என்றால் என்ன?

பக்கவாதம் (stroke)

பக்கவாதம் (stroke) என்றால் என்ன?

பக்கவாதம் (stroke)

பக்கவாதம் (stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்  குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும். மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும்  பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால் பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்.

பக்கவாதம் நிரந்தரமான நரம்புச் சிதைவை ஏற்படுத்துவதுடன் இறப்பும் நிகழலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வளர்ந்தவர்களில் ஏற்படும் ஊனத்துக்கான முன்னணிக் காரணம் இதுவாகும். ஐக்கிய இராச்சியத்தில் இறப்புக்கான காரணிகளில் இது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவிலும் இறப்புக்கான காரணிகளுள் இது இரண்டாவதாக இருப்பதுடன், விரைவில் இது முதல் இடத்துக்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது.

பக்கவாதம் (stroke) எதனால் வருகிறது?

  • ரத்தம் அழுத்தம் இருந்தால்.
  • சர்க்கரை நோய்.
  • இதயம் நோய்.
  • உடம்பில் அதிக கொழுப்பு இருந்தால்.
  • மது குடித்தால்.
  • சிகரெட் அடித்தால்.நீங்கள் நிறைய கவலைப்பட்டாலும் பக்கவாதம் ஏற்படும்.
  • அளவுக்கு மீறிய கோபம் இருந்தாலும் பக்கவாதம் ஏற்படும்.
  • தூக்கம் இல்லாமல் இருந்தால்.

பக்கவாதம் சரி செய்யும் உணவுகள் என்ன?

  • நிறைய காய்கறிகள்.
    பல்வேறு பழங்கள்.
    தானியங்கள் மற்றும் தானியங்கள்
    ரொட்டி, தானியங்கள், அரிசி, பாஸ்தா மற்றும் ஓட்ஸ் போன்ற உயர் நார்ச்சத்து வகைகள்.
    ஒல்லியான இறைச்சி மற்றும் கோழி, மீன், முட்டை
    கொட்டைகள், விதைகள் மற்றும் பீன்ஸ்.
    பால், தயிர், சீஸ் மற்றும் அவற்றின் மாற்று
    நிறைய தண்ணீர் குடிக்கவும்.
பக்கவாதம் (stroke) என்றால் என்ன?

பக்கவாதம் (stroke)

பக்கவாதங்கள் உள்ள அறிகுறி என்ன?

  1. நடக்கும்போது தடுமாறுவார்கள்.
  2. கண் பார்வை மங்கலாக இருக்கும்.
  3. முகம் தள்ளும் ஒரு பக்கம் வேலை செய்யாது போல் இருக்கும்.
  4. உடம்பு சோர்வாக இருக்கும்.
  5. கை கால் அசைவுகள் சரியாக இருக்காது.
  6. பேச்சு சரியாக இருக்காது. பேச்சுகள் குறையும்.

இந்த மாதிரி சில விஷயங்கள் இருந்தால். உடனே மருத்துவமனைக்கு சென்று அவர்களை காமிங்க.

Leave a Reply