தமிழ்நாட்டை அலற விடும் அரிசி விலை. தொடர்ந்து உயர்வதால் மக்கள் பீதி. ரூ.2000 கொடுத்தாலும் முடியாது

அரிசி விலை இன்னும் ஒரு வருடத்திற்கு குறையாது என்றும், மேலும் அதிகரிக்கவே செய்யும் எனவும் வியாபாரிகளும், விவசாயிகளும் கூறுகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலையால் ஏழை – நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இன்னும் ஒரு வருடத்திற்கு அரிசி விலை தொடர்ந்து அதிகரிக்கும் எனக் கூறப்படுவதால் மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு உணவு வகைகள் இருந்தாலும், ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்டு மக்களின் உணவுத் தேவையை சில வகை தானியங்கள் தான் பூர்த்தி செய்து வருகின்றன. அப்படி இந்தியாவை எடுத்துக் கொண்டால் கோதுமையும், அரிசியும் தான் பிரதான உணவு தானியங்களாக விளங்குகின்றன. எனவே இந்த தானிய விளைச்சலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, விலையேற்றம் கண்டாலோ ஒட்டுமொத்த இந்தியாவும் ஸ்தம்பித்துவிடும்.

அந்த வகையில், தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களின் பிரதான உணவாக திகழும் அரசியின் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் அதன் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் ஒரு கிலோ அரிசி ரூ.15 முதல் ரூ.17 வரை விலை உயர்ந்திருக்கிறது. இதனால் மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்ப பட்ஜெட்டில் ரூ.400 முதல் ரூ.500 வரை துண்டு விழுவதாக கூறி புலம்புகின்றனர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

 

 

Leave a Reply